அதிகரிக்கும் கொரோனா : தமிழகத்தில் மீண்டும் கட்டுப்பாடுகளா ? - அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில்
செய்தியளர்களை சந்தித்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது
சென்னை,
தமிழகத்தில் கொரோனா மீண்டும் அதிகரித்து வருகிறது .கடந்த 125 நாட்களுக்கு பிறகு தமிழகத்தில் கொரோனா பாதிப்பு ஆயிரத்தை கடந்துள்ளது .அதன்படி 1,063 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இதனால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
இந்த நிலையில் செய்தியளர்களை சந்தித்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது ;
கொரோனாவால் உயிர் பாதிப்பு குறைவாகவே உள்ளது; பிஏ 4, பிஏ 5 உயிர்கொல்லியாக இல்லாமல் வேகமாக பரவும் தன்மை கொண்டது. மக்கள் எச்சரிக்கையாக இருந்தாலே போதும். குழந்தைகளை பள்ளிகளுக்கு அனுப்பும்போது கொரோனா அறிகுறி இருக்கிறதா? என கண்காணிக்க வேண்டும். குழந்தைகளுக்கு சளி, காய்ச்சல், தொண்டை எரிச்சல் இருந்தால் உடனே மருத்துவரை அணுக வேண்டும்
.பொதுமக்கள் அவசியம் முகக்கவசம் அணிய வேண்டும்.கொரோனா பாதிக்கப்பட்ட 92 சதவீதம் பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.18 சதவீதம் பேர் மட்டுமே மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டுள்ளனர்.கொரோனா அதிகரித்தாலும் தமிழ்நாட்டில் தற்போதைக்கு புதிய கட்டுப்பாடுகள் இல்லை. என்றார்.