வரத்து குறைவால் நிலக்கடலை விலை உயர்வு
வரத்து குறைவால் நிலக்கடலை விலை உயர்த்தப்பட்டுள்ளது.
கரூர்
நொய்யல் அருகே சாலைப்புதூர் அரசு ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் வாரந்தோறும் நிலக்கடலை ஏலம் நடைபெறுகிறது. இதில் கரூர் மற்றும் க.பரமத்தி ஒன்றிய பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் தாங்கள் விளைவித்த வேளாண் பொருட்களை விற்பனைக்கு கொண்டு செல்கின்றனர். அங்கு நடைபெறும் ஏலத்தில் தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களை சேர்ந்த வியாபாரிகள் மற்றும் எண்ணைய் நிறுவன முகவர்கள் கலந்து கொண்டு பொருட்களை வாங்கி செல்கின்றனர். அதன்படி இந்த வாரம் நடந்த ஏலத்திற்கு 285 மூட்டை நிலக்கடலை கொண்டு வரப்பட்டது. இதில் அதிகப்படி விலையாக கிலோ ஒன்றுக்கு ரூ.70.60-க்கும், குறைந்த விலையாக ரூ. 62.40க்கும், சராசரி விலையாக ரூ.68.80-க்கும் ஏலம் போனது. நிலக்கடலை வரத்து குறைவின் காரணமாக விலை உயர்வு ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர். இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Related Tags :
Next Story