பந்தலூர் அருகே குண்டும், குழியுமான சாலையால் விபத்து அபாயம்-தார்சாலை அமைக்க வாகன ஓட்டிகள் வலியுறுத்தல்


பந்தலூர் அருகே குண்டும், குழியுமான சாலையால் விபத்து அபாயம்-தார்சாலை அமைக்க வாகன ஓட்டிகள் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 10 May 2023 12:15 AM IST (Updated: 10 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon
நீலகிரி

பந்தலூர்

பந்தலூர் அருகே குண்டும், குழியுமான சாலையால் விபத்து அபாயம் ஏற்பட்டு உள்ளது. அதனால் தார்சாலை அமைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் மற்றும் ஆதிவாசி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளார்கள்.

குண்டும், குழியுமான சாலை

பந்தலூர் ஏலமன்னா அருகே பன்னிகொல்லி ஆதிவாசி கிராமத்தில் ஏராளமானோர் வசித்து வருகிறார்கள். இந்த கிராமத்திற்கு செல்லும் சாலை மண்சாலையாகவும், குண்டும் குழியுமாகவும் காணப்படுகிறது. அதனால் ஆதிவாசி மக்கள் பெரிதும் சிரமப்பட்டு வந்தனர். எனவே தார்சாலை அமைக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்திடம் ஆதிவாசி மக்கள் மனு கொடுத்தனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு சாலை அமைப்பதற்காக ஏலமன்னாவிலிருந்து பன்னிகொல்லிக்கு குறிப்பிட்ட தூரம் கற்கள் பதிக்கப்பட்டது. ஆனால்அந்த பணியும் பாதியில் நிறுத்தப்பட்டது. மேலும் சாலை அமைக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் தற்போது பெய்த மழை காரணமாக அந்தப்பகுதியே சேறும்-சகதியுமாக காணப்படுகிறது.

விபத்துகள் நடக்கிறது

இதில் நடந்து செல்லும் மாணவ-மாணவிகள் மற்றும் ஆதிவாசி மக்கள் கீேழ வழுக்கி விழுந்து விடுகிறார்கள். மேலும் பெரிதும் சிரமப்பட்டு வருகிறார்கள். இதேபோல் நோயாளிகள் மற்றும் கர்ப்பிணி பெண்களையும் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல 108 ஆம்புலன்ஸ்களும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டு வருகிறது. அதனால் விரைவில் தார்சாலை அமைக்க வேண்டும் என்று ஆதிவாசி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளார்கள். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:- சாலையை தார்சாலையாக மாற்ற நெல்லியாளம் நகராட்சிக்கும் மாவட்ட நிர்வாகத்திற்கும் மனுக்கள் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் சாலை குண்டும் குழியுமாக காட்சி அளிக்கிறது. மேலும் அடிக்கடி வாகன விபத்துகள் நடக்கிறது. எனவே தார்சாலை அமைக்க நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story