பர்லியாறில் வேகத்தடை இல்லாததால் விபத்து அபாயம்-உரிய நடவடிக்கை எடுக்க வாகன ஓட்டிகள் வலியுறுத்தல்


பர்லியாறில் வேகத்தடை இல்லாததால் விபத்து அபாயம்-உரிய நடவடிக்கை எடுக்க வாகன ஓட்டிகள் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 10 May 2023 12:30 AM IST (Updated: 10 May 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

ஊட்டி-மேட்டுப்பாளையம் சாலையில், பர்லியாறில் வேகத்தடை இல்லாததால் அடிக்கடி விபத்துகள் நடக்கிறது. அதனால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளார்கள்.

நீலகிரி

ஊட்டி-மேட்டுப்பாளையம் சாலையில், பர்லியாறில் வேகத்தடை இல்லாததால் அடிக்கடி விபத்துகள் நடக்கிறது. அதனால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளார்கள்.

கோடை சீசன்

நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு கர்நாடகா, கேரளா மாநிலங்களில் இருந்து கூடலூர் வழியாகவும், கோவை உள்பட தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்து குன்னூர், கோத்தகிரி சாலை வழியாகவும் வாகனங்கள் வந்து செல்கின்றன. இதனால் ஊட்டி-குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலை முக்கிய சாலையாக உள்ளது.

சீசன் காலங்களில் ஆயிரக்கணக்கான வாகனங்கள் படையெடுத்து வருகின்றன. தொடர்ந்து விபத்து ஏற்படுவதை தவிர்க்கவும், மற்ற சாலைகளில் போக்குவரத்துக்கு தடை ஏற்பட்டால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும் ரூ.62 கோடி செலவில் ஊட்டி-குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையை விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இந்தநிலையில் சோதனைச்சாவடி பணிகளில் கண்காணிப்பை தீவிர படுத்த பர்லியாறு சோதனைச்சாவடிகள் வேகத்தடை அமைக்க வேண்டும் என்று போலீசார் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து போலீசார் கூறியதாவது:-

வேகத்தடை அமைக்க வேண்டும்

ஊட்டி- மேட்டுப்பாளையம் சாலையில் பர்லியாறு வழியாக தினசரி 2000 வாகனங்களும், சீசன் நாட்களில் 5 ஆயிரம் வாகனங்களும் செல்கின்றன. சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிக அளவில் இருப்பதால், இதை பயன்படுத்தி திருட்டு சம்பவங்களும் நடைபெறும். இவர் திருட்டு சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் பெரும்பாலும் திருட்டு வாகனங்களை எடுத்துக் கொண்டு, சமவெளி பகுதிக்கு தப்பி செல்ல முயற்சி செய்வார்கள். அதேபோல் பல்வேறு சூழ்நிலைகளில் சமவெளிபகுதியில் திருட்டு சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகள் ஊட்டிக்கு வருவார்கள்.

முதலில் 7 மீட்டர் அகலம் இருந்த சாலை தற்போது 10 மீட்டர் வரை சிறப்பாக அகலப்படுத்தப்பட்டு உள்ளது.

அந்த சூழ்நிலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டால் குற்றவாளிகள் வேகமாக சென்று தப்பித்து விடுகிறார்கள். கடந்த சில நாட்களுக்கு முன் கூடலூரில் இருசக்கர வாகனத்தை திருடிய நபர் இந்த வழியாக வேகமாக செல்லும்போது, போலீசார் நிறுத்துமாறு சைகை காட்டியும் வேகமாக சென்று கீழே விழுந்து வாகனத்தை போட்டு விட்டு தப்பி ஓடி விட்டார். மேலும் கோவை கோர்ட்டு வளாகத்தில் நடந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் இருசக்கர வாகனத்தில் தப்பி ஊட்டிக்கு வந்தது குறிப்பிடத்தக்கது. எனவே பர்லியார் சோதனைச்சாவடியில் வேகத்தடை அமைக்க நெடுஞ்சாலை துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறையினர் கூறுகையில், மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் ரோடு தேசிய நெடுஞ்சாலை என்பதால் வேகத்தடைகள் அமைக்க முடியாது. கோர்ட்டு உத்தரவின் பேரில் வனவிலங்குகள் நடமாட்டம் இருக்கும் இடத்தில் மட்டும் அமைக்கப்பட்டுள்ளது என்றனர்.


Next Story