வடிகால் வாய்க்காலில் கடல்நீர் கலப்பதால் விளைநிலங்கள் பாதிக்கப்படும் அபாயம்
கொள்ளிடம் அருகே வடிகால் வாய்க்காலில் கடல்நீர் கலப்பதால் விளைநிலங்கள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கொள்ளிடம்:
கொள்ளிடம் அருகே வடிகால் வாய்க்காலில் கடல்நீர் கலப்பதால் விளைநிலங்கள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கதவணை
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே பழையப்பாளையம் பாசன வடிகால் வாய்க்கால் உள்ளது. இந்த வடிகால் வாய்க்கால் மூலம் ஆரப்பள்ளம், நல்லூர், பழைய பாளையம், கொடைக்காரமுலை ஆகிய கிராம பகுதிகளில் உள்ள விளைநிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.இந்த நிலையில் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு உப்பனாற்றில் குறுக்கே கடல் நீர் உட்புகாதவாறு கதவணை அமைக்கப்பட்டது. தற்போது அந்த கதவணை சேதமடைந்துள்ள எந்தவித பயனும் இன்றி உள்ளது.
விளைநிலங்கள் பாதிக்கும் அபாயம்
பழையபாளையம் வடிவாய்க்காலில் அதிக அளவில் கடல் நீர் கலந்து வருகிறது. இதனால் இந்த பகுதியில் உள்ள விளைநிலங்களில் புகுந்து பாதிக்கப்படும் அபாய நிலை உள்ளது. மேலும் நிலத்தடி நீரும் உவர் தன்மையாக மாறி வருகிறது.
எனவே பழையபாளையம் வடிகால் வாய்க்காலில் கடல் நீர் கலக்காத வகையில் தடுக்க உப்பனாற்றில் உள்ள தடுப்பணையை சரி செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பழையபாளையம், ஆரப்பள்ளம் கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.