சாலையில் ஓடும் கழிவுநீரால் நோய் ஏற்படும் அபாயம்
அருணாசலேஸ்வரர் கோவில் மாட வீதியில் சாலையில் ஓடும் கழிவுநீரால் நோய் ஏற்படும் அபாயம்
திருவண்ணாமலை
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் பே கோபுரம் உள்ள மாடவீதியில் கால்வாய் அமைக்கும் பணிகள் நடைபெற்றது.
இங்கு காலை முதல் இரவு வரை மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியாகும்.
பே கோபுர தெருவில் இருந்து வெளியே வரும் கழிவுநீர் செல்வதற்கு போதிய வசதி செய்து கொடுக்காததால் அந்த கழிவு நீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடுகிறது.
சாலையில் ஓடும் கழிவுநீரினால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் கழிவுநீரை மக்கள் மிதித்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது. அந்த வழியாக பஸ் உள்ளிட்ட வாகனங்கள் செல்லும் போது அந்த வழியாக செல்லும் மக்கள் மீது கழிவு நீர் தெறிகின்றது.
இதனால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது.
மேலும் நேற்றும், இன்றும் பவுர்ணமி என்பதால் அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு வந்த பக்தர்கள் இந்த வழியாக நடந்து செல்ல முடியாமல் அவதி அடைந்தனர்.
எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.