வழிந்தோடும் கழிவுநீரால் தொற்றுநோய் பரவும் அபாயம்


வழிந்தோடும் கழிவுநீரால் தொற்றுநோய் பரவும் அபாயம்
x
தினத்தந்தி 6 Oct 2022 12:15 AM IST (Updated: 6 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

நாகை கடைத்தெருவில் வழிந்தோடும் கழிவுநீரால் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாகப்பட்டினம்

வெளிப்பாளையம்:

நாகை கடைத்தெருவில் வழிந்தோடும் கழிவுநீரால் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குடிநீர் பிரச்சினை

நாகை நகராட்சிக்குட்பட்ட காடம்பாடி, மறைமலைநகர், சட்டையப்பர் மேலவீதி, மருந்து கொத்தளதெரு உள்ளிட்ட நகரின் பல்வேறு பகுதிகளில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக குடிநீர் வினியோகம் இல்லை. நேற்றுமுன்தினம் ஆயுதபூஜைக்கு கூட சரியாக குடிநீர் வராததால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். எனவே குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வழிந்தோடும் கழிவுநீர்

நாகை - நாகூர் சாலையில் பாதாள சாக்கடை திட்டம் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்த பாதாள சாக்கடையில் அவ்வப்போது ஆங்காங்கே அடைப்பு ஏற்பட்டு சாலைகளில் கழிவு நீர் வழிந்து ஓடும் நிகழ்வுகளும் ஏற்படும். இந்தநிலையில் நாகையின் முக்கிய வணிக வளாகங்கள் நிறைந்த பெரிய கடை தெருவில் பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் கடந்த இரண்டு தினங்களாக நிரம்பி சாலையில் வழிந்து ஓடுகிறது. இதனால் அந்த பகுதியில் கடை வைத்திருப்பவர்களும், பெரியகடைத்தெருவிற்கு செல்லும் பொதுமக்களும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே பெரிய கடைத்தெரு பகுதியில் வழிந்தோடும் கழிவுநீரை அகற்றி, பொதுமக்கள் சிரமமின்றி சென்று வர உடனடியாக நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வியாபாரிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story