சுற்றித்திரியும் பன்றிகளால் தொற்றுநோய் பரவும் அபாயம்
திட்டச்சேரி பேரூராட்சியில் குடியிருப்பு பகுதிகளில் சுற்றித்திரியும் பன்றிகளால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. இவற்றை பிடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திட்டச்சேரி:
திட்டச்சேரி பேரூராட்சியில் குடியிருப்பு பகுதிகளில் சுற்றித்திரியும் பன்றிகளால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. இவற்றை பிடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சுற்றித்திரியும் பன்றிகள்
திட்டச்சேரி பேரூராட்சிக்குட்பட்ட தைக்கால்தெரு, பச்சான் தோப்பு, காந்திசாலை, மெயின்ரோடு, ஆண்டவர் நகர், வடக்குத்தெரு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் பன்றிகள் சுற்றித்திரிகின்றன.
இந்த பன்றிகள் வீடுகளுக்குள் புகுந்து பொருட்களை நாசம் செய்வதால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.மேலும்சாலையோரம் கொட்டப்பட்டுள்ள கழிவுகளாலும், சுற்றித்திரியும் பன்றிகளாலும் அப்பகுதியில் சுகாதாரக் கேடுகள் ஏற்பட்டுள்ளது.இதனால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது.
பொருட்களை சேதப்படுத்துகின்றன
இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த செய்யது முபாரக் கூறுகையில், கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக தைக்கால் தெரு, வடக்கு தெரு, காந்தி சாலை, மெயின் ரோடு பகுதிகளில் பன்றிகள் அட்டகாசம் அதிக அளவில் உள்ளது. பகல் நேரங்களில் வீடுகளில் புகுந்து வீட்டில் உள்ள பொருட்களை எல்லாம் சேதப்படுத்துகின்றன. மேலும் தற்போது மழைக்காலம் என்பதால் பன்றிகளால் காய்ச்சல் உள்ளிட்ட நோய் தொற்று பரவும் அபாய நிலை உள்ளது.
நடவடிக்கை
அப்பகுதியை சேர்ந்த முகமது ரெஜிபுதீன் கூறுகையில், திட்டச்சேரி பகுதிகளில் பன்றிகளின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.குறிப்பாக வடக்கு தெரு, காந்தி சாலை, மெயின் ரோடு பகுதிகளில் அதிக அளவில் பன்றிகள் சுற்றித்திரிகின்றன. பன்றிகள் அடிக்கடி சாலையின் குறுக்கே ஓடுவதால் விபத்துகள் ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பன்றிகளை பிடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்ைக விடுத்துள்ளனர்.