தேங்கிய கழிவுநீரால் தொற்று பரவும் அபாயம்
அருப்புக்கோட்டை புதிய பஸ் நிலையம் முன்பு தேங்கி கிடக்கும் கழிவுநீரால் தொற்றுேநாய் பரவும் அபாயம் உள்ளது.
அருப்புக்கோட்டை,
அருப்புக்கோட்டை புதிய பஸ் நிலையம் முன்பு தேங்கி கிடக்கும் கழிவுநீரால் தொற்றுேநாய் பரவும் அபாயம் உள்ளது.
தேங்கி நிற்கும் கழிவுநீர்
அருப்புக்கோட்டை புதிய பஸ் நிலையத்திற்கு தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். புதிய பஸ் நிலைய நுழைவுவாயிலில் ஓட்டல்கள், டீக்கடைகள், பேன்சி ஸ்டோர், கிப்ட் சென்டர், செல்போன் கடைகள் என எண்ணற்ற கடைகள் உள்ளன. இந்தநிலையில் அப்பகுதியில் கழிவுநீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு கழிவு நீர் முழுவதும் அந்த கடைகள் முன்பு தேங்கி நிற்கிறது.
இதனால் அந்த வழியாக பயணிகள் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும் அப்பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் வீசுகிறது. தேங்கி நிற்கும் கழிவு நீரில் கொசுக்கள் உற்பத்தியாகி தொற்றுேநாய் பரவும் அபாயம் உள்ளது.
நடவடிக்கை
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:- அருப்புக்கோட்டை புதிய பஸ்நிலையத்திற்கு தினமும் எண்ணற்ற பேர் வருகின்றனர். இந்தநிலையில் பஸ்நிலையத்தின் நுழைவுவாயிலில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த வழியாக செல்பவர்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர்.
மேலும் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்த இந்த பகுதியில் தேங்கி நிற்கும் கழிவுநீரை வெளியேற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.