கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலையில் தாழ்வாக செல்லும் மின்கம்பிகளால் உயிரிழப்பு ஏற்படும் அபாயம்-உரிய நடவடிக்ைக எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தல்

கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலையில் தாழ்வாக செல்லும் மின்கம்பிகளால் உயிரிழப்பு ஏற்படும் அபாயம்-உரிய நடவடிக்ைக எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 8 Oct 2022 12:15 AM IST (Updated: 8 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

கோத்தகிரியிலிருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில் மாமரம் சோதனைச் சாவடி அருகில் மின்கம்பிகள் மிகவும் தாழ்வாக செல்வதால் விபத்துகள் மற்றும் உயிரிழப்புகள் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

நீலகிரி

கோத்தகிரி

கோத்தகிரியிலிருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில் மாமரம் சோதனைச் சாவடி அருகில் மின்கம்பிகள் மிகவும் தாழ்வாக செல்வதால் விபத்துகள் மற்றும் உயிரிழப்புகள் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தாழ்வான மின்கம்பிகள்

கோத்தகிரியிலிருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சாலை நீலகிரி மாவட்டத்தை சமவெளிப் பகுதிகளுடன் இணைக்கும் பிரதான சாலையாகும். இந்த சாலையில் தினம்தோறும் கட்டுமானப் பொருட்களை சமவெளிப் பகுதிகளில் இருந்து ஏற்றி வரும் கனரக வாகனங்கள், சுற்றுலா வாகனங்கள் மற்றும் உள்ளூர் வாகனங்கள் என நூற்றுக்கணக்கான வாகனங்கள் இரவு, பகலாக இயக்கப்பட்டு வருகின்றன.

இந்த சாலையில் மாமரம் கிராமப் பகுதியில் போலீஸ் சோதனைச் சாவடி ஒன்றும் செயல்பட்டு வருகிறது. இந்த சோதனைச் சாவடிக்கு எதிரே சாலையோரத்தில் உயர் அழுத்த மின்சார கம்பிகள் மிகவும் தாழ்வாக உள்ளன.

நடவடிக்கை

இந்தப் பகுதி காட்டெருமை, காட்டு யானைகள் நடந்து செல்லும் வழித்தடமாக உள்ளதால், சுற்றுலாப் பயணிகள் சாலையோரம் நின்று வனவிலங்குகளைப் புகைப்படம் எடுத்துச் செல்வது வழக்கமாக உள்ளது. இந்தநிலையில் தாழ்வாக செல்லும் உயர் அழுத்த மின் கம்பிகள் அருகிலுள்ள செடி, கொடிகள் மற்றும் மரங்கள் மீது தொடும் வகையில் இருப்பதால், மின்சார கசிவு ஏற்பட்டு மனிதர்கள், தொழிலாளர்கள் மற்றும் வனவிலங்குகள் மின்சாரம் தாக்கி விபத்துக்குள்ளாகும் அபாயம் இருந்து வருகிறது. மேலும் வனவிலங்குகள் சிக்கி உயிரிழப்புகள் ஏற்படும் அபாயமும் நிலவுகிறது.

எனவே ஆபத்தான வகையில் தாழ்வாக செல்லும் மின்சார கம்பிகளை பராமரித்து உயரமாக செல்லும் வகையில் அமைக்க மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story