பன்றிகளால் தொற்றுநோய் பரவும் அபாயம்


பன்றிகளால் தொற்றுநோய் பரவும் அபாயம்
x
தினத்தந்தி 21 Jan 2023 12:15 AM IST (Updated: 21 Jan 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

அகரக்கொந்தகை ஊராட்சியில் சுற்றித்திரியும் பன்றிகளால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. பன்றிகளை பிடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாகப்பட்டினம்

திட்டச்சேரி:

அகரக்கொந்தகை ஊராட்சியில் சுற்றித்திரியும் பன்றிகளால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. பன்றிகளை பிடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சுற்றித்திரியும் பன்றிகள்

திருமருகல் ஒன்றியம் அகரக்கொந்தகை ஊராட்சி வாழ்மங்கலத்தில் மாதா கோவில் செல்லும் சாலையில் குப்பைகள், கோழி, ஆடு ஆகிய இறைச்சி கழிவுகள் கொட்டப்பட்டு மலைபோல் குவிந்து கிடக்கிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதால் அவ்வழியே செல்பவர்கள் மூக்கை மூடிக் கொண்டு செல்கின்றனர்.

இந்த கழிவு பொருட்களை திண்பதற்காக பன்றிகள் கூட்டம் கூட்டமாக வருகின்றன. இவ்வாறு வரும் பன்றிகள் ஒன்றொடு ஒன்று சண்டை போட்டுக்கொண்டு சாலையில் குறுக்கே ஓடுவதால் வாகனங்களின் மீது விழுந்து விபத்துகள் ஏற்படுகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.

தொற்றுநோய் பரவும் அபாயம்

இந்த பன்றிகள் மடத்தெரு, திரவுபதி அம்மன்கோவில்தெரு, தோப்புத் தெரு, மாதாகோவில்தெரு உள்ளிட்ட பகுதியில் உள்ள வீடுகளில் புகுந்து பொருட்களை நாசம் செய்வதால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். சாலையோரம் கொட்டப்பட்டுள்ள கழிவுகளாலும், சுற்றித்திரியும் பன்றிகளாலும் அப்பகுதியில் சுகாதார கேடுகள் ஏற்பட்டுள்ளது. இதனால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது.

நடவடிக்கை

இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அப்பகுதி பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வாழ்மங்கலம் பகுதிகளில் கொட்டப்பட்டுள்ள இறைச்சிக் கழிவுகள், குப்பைகளை அகற்றவும், சுற்றித்திரியும் பன்றிகளை பிடித்து அப்புறப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story