லால்குடியில் பன்றிகளால் தொற்று நோய் பரவும் அபாயம்
லால்குடியில் பன்றிகளால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டது.
திருச்சி
திருச்சி மாவட்டம் லால்குடி ஆங்கரை ஊராட்சி 3-வது வார்டு மணியக்கார தெருவில் சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்தநிலையில் அதே பகுதியை சேர்ந்த சிலர் குடியிருப்பின் மையப்பகுதியில் கூடாரம் அமைத்து 100-க்கும் மேற்பட்ட பன்றிகளை வளர்த்து வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுவதுடன், தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. மேலும் சிலருக்கு காய்ச்சல் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து பன்றி வளர்ப்பவர்களிடம் கேட்டால் ஊராட்சியில் முறைப்படி அனுமதி பெற்றுதான் வளர்ப்பதாக கூறுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட இந்த பகுதியை அதிகாரிகள் ஆய்வு செய்து, நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story