அய்யனார்கோவில் ஆற்றில் வெள்ளம்; 100 பேர் கயிறு கட்டி மீட்பு


அய்யனார்கோவில் ஆற்றில் வெள்ளம்;  100 பேர் கயிறு கட்டி மீட்பு
x

ராஜபாளையம் அருகே அய்யனார்கோவில் ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கினால் கடக்க முடியாமல் தவித்த 100 ேபர், கயிறு கட்டி பத்திரமாக மீட்கப்பட்டனர்.

விருதுநகர்

ராஜபாளையம்,

ராஜபாளையம் அருகே அய்யனார்கோவில் ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கினால் கடக்க முடியாமல் தவித்த 100 ேபர், கயிறு கட்டி பத்திரமாக மீட்கப்பட்டனர்.

அய்யனார் கோவில் ஆறு

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப்பகுதியில் அய்யனார் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு ஆற்றை கடந்து செல்ல வேண்டும். மழை நேரங்களில் நீர்வரத்து அதிகமாக இருந்தால் இந்த ஆற்றை கடந்து செல்வது மிக சிரமமான காரியமாகும்.

நேற்று விடுமுறை தினம் என்பதால் ராஜபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து ஏராளமான மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அய்யனார் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்கும், ஆற்றில் குளிப்பதற்கும் சென்றனர்.

100 பேர் மீட்பு

மாலையில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த கனமழை காரணமாக அய்யனார் கோவில் ஆற்றில் வழக்கத்தை விட நீர்வரத்து அதிகரித்தது.

திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக கோவிலுக்கு சென்றவர்களும், குளிப்பதற்காக சென்றவர்களும் திரும்பி வர முடியாமல் தவித்தனர். இதுகுறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், சிவகாசி ஆகிய பகுதிகளில் இருந்து தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்தனர். ஆற்றை கடந்து வர திரும்ப முடியாமல் தவித்த 100-க்கும் மேற்பட்டவர்களை கயிறு கட்டி பத்திரமாக மீட்டு அழைத்து வந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து துணை போலீஸ் சூப்பிரண்டு பிரீத்தி, தாசில்தார் சீனிவாசன் தலைமையிலான குழுவினரும் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.



Next Story