திருவாரூர் சுக்கானாற்றில் பரவி கிடக்கும் ஆகாயத்தாமரை செடிகள்


திருவாரூர் சுக்கானாற்றில் பரவி கிடக்கும் ஆகாயத்தாமரை செடிகள்
x

திருவாரூர் சுக்கானாற்றில் பாசனத்துக்கு தடையாக பரவி கிடக்கும் ஆகாயத்தாமரை செடிகளை அகற்ற வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவாரூர்

திருவாரூர்;

திருவாரூர் சுக்கானாற்றில் பாசனத்துக்கு தடையாக பரவி கிடக்கும் ஆகாயத்தாமரை செடிகளை அகற்ற வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சுக்கானாறு

திருவாரூர் நகரின் வடக்கு பகுதியில் சுக்கானாறு செல்கிறது. இந்த ஆறு பேட்டை தஞ்சாவூர், கீழப்பேட்டை, மேலப்பேட்டை, பழவனக்குடி, அடிபுதுச்சேரி உள்ளிட்ட கிராமங்கள் வழியாக சென்று ஓடாச்சேரி என்ற இடத்தில் வெட்டாற்றில் கலக்கிறது. இப்பகுதி கிராம மக்கள் இந்த பாசனத்தை பயன்படுத்தி சாகுபடி பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் மழை காலங்களில் வடிகாலாகவும் இந்த சுக்கானாறு இருந்து வருகிறது.

ஆகாயத்தாமரை செடிகள்

சுக்கானாற்றில் திருவாரூர் பகுதியில் உள்ள கழிவு நீர் அதிகமாக கலந்து வருகிறது. இதனால் பாசன ஆறு சாக்கடை ஆறாக மாறி வருகிறது. கழிவுநீர் கலப்பால் தண்ணீர் மாசு அடைந்து விவசாயத்துக்கு பயன்படுத்தும்போது பயிர்கள் பாதிக்கப்பட்டு வருகிறது. இதனால் விவசாயிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகிறார்கள். தற்போது இந்த ஆற்றில் ஆகாயத்தாமரை செடிகள் மண்டி கிடக்கிறது.

விரைவில் அகற்ற கோரிக்கை

இந்த ஆகாயத்தாமரை ஆற்றில் முழுமையாக படர்ந்து கிடப்பதால் தண்ணீர் பாசனம் தடைபடும் அபாய நிலை உள்ளது. ஏற்கனவே இந்த ஆற்றில் கழிவு நீர் கலந்து வரும் நிலையில் ஆகாய தாமரை மண்டி கிடப்பதால் விவசாயிகள் அவதிப்பட்டு வருகிறார்கள். எனவே சுக்கானாற்றில் பாசனத்துக்கு தடையாக பரவி கிடக்கும் ஆகாயத்தாமரை செடிகளை அகற்ற வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story