ஆற்றின் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுரை


ஆற்றின் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுரை
x
தினத்தந்தி 10 Dec 2022 12:15 AM IST (Updated: 10 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

மாண்டஸ் புயலால் ஆற்றின் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டனா்.

விழுப்புரம்

விழுப்புரம்:

மாண்டஸ் புயலை எதிர்கொள்ளவும், அதனால் பெய்யும் கனமழையினால் ஏற்படும் பாதிப்புகளை சமாளிக்கவும் விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு முன்எச்சரிக்கை நடவடிக்கை பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனிடையே தென்பெண்ணையாறு, மலட்டாறு, பம்பை ஆறு உள்ளிட்ட ஆறுகளின் கரையோரத்தில் வசிக்கும் பொதுமக்களுக்கு காவல்துறை, வருவாய்த்துறை சார்பில் ஒலிபெருக்கி மூலம் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டது. அதாவது புயல் கரையை கடக்கும் சமயத்தில் பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம், ஆற்றின் கரையோரத்தில் வசிக்கும் மக்கள், குழந்தைகள் யாரும் ஆற்றை கடந்து செல்லக்கூடாது, பாதுகாப்பான இடத்தில் இருக்குமாறு போலீசாரும், வருவாய்த்துறையினரும் ஆட்டோ, சரக்கு வாகனத்தின் மூலம் ஒலிப்பெருக்கி வழியாக அறிவுறுத்தினர்.


Next Story