தாமதமாக நடக்கும்சாலை விரிவாக்க பணி


தாமதமாக நடக்கும்சாலை விரிவாக்க பணி
x
திருப்பூர்


பொள்ளாச்சி -தாராபுரம் மாநில நெடுஞ்சாலை விரிவாக்கம் செய்யும் பணி தாமதமாக நடைபெறுவதால் விபத்துகள் ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

மாநில நெடுஞ்சாலை

பொள்ளாச்சி-தாராபுரம் மாநில நெடுஞ்சாலையில் கரூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தாராபுரம்-பொள்ளாச்சி வழியாக கேரளாவுக்கு தினமும் காய்கறி உள்ளிட்ட சரக்கு வாகனங்கள் அதிக அளவில் சென்று வருகின்றன.

இதுதவிர குடிமங்கலம் பகுதியில் காற்றாலைகள் அதிக அளவில் நிறுவப்பட்டுள்ள நிலையில் கனரக வாகனங்கள் சென்று வருகின்றன. பொள்ளாச்சி-தாராபுரம் மாநில நெடுஞ்சாலை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பூசாரிப்பட்டி பகுதியிலிருந்து விரிவாக்கம் செய்யப்பட்டது

விபத்துகள்

பொள்ளாச்சி-தாராபுரம் மாநில நெடுஞ்சாலை 7 மீட்டர் அகலத்தில் இருந்து 2.5 மீட்டர் அளவிற்கு விரிவாக்கம் செய்யப்பட்டது. இரு வழிப்பாதை பல வழிப்பாதையாக மாற்றப்பட்டுள்ள நிலையில் கனரக வாகனங்கள், சரக்கு வாகனங்களின் போக்குவரத்து நெடுஞ்சாலைகளில் அதிகரித்துள்ளது. பொள்ளாச்சி-தாராபுரம் மாநில நெடுஞ்சாலை குடிமங்கலம் நால்ரோடு அருகே விரிவாக்கம் செய்வதற்காக தோண்டப்பட்ட பள்ளங்கள் பல நாட்களாக நிரப்பப்படாமல் உள்ளது.

நெடுஞ்சாலையில் தினமும் வாகனங்கள் அதிக அளவில் சென்று வரும் நிலையில் எச்சரிக்கை அறிவிப்பு பலகைகள் எதுவும் வைக்கப்படாமலும் தடுப்புகள் அமைக்கப்படாமலும் உள்ளதால் விபத்துகள் ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். எனவே தடுப்புகள் அமைத்து பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.


Next Story