பவானி -மேட்டூர் ரோடு அகலப்படுத்தும் பணிக்காக ரோட்டோர மரங்கள் வெட்டி அகற்றம்


பவானி -மேட்டூர் ரோடு அகலப்படுத்தும் பணிக்காக ரோட்டோர மரங்கள் வெட்டி அகற்றம்
x

பவானி -மேட்டூர் ரோடு அகலப்படுத்தும் பணிக்காக ரோட்டோர மரங்கள் வெட்டி அகற்றப்பட்டன.

ஈரோடு

அம்மாபேட்டை

பவானி -மேட்டூர் ரோடு அகலப்படுத்தும் பணிக்காக ரோட்டோர மரங்கள் வெட்டி அகற்றப்பட்டன.

சாலை மேம்பாட்டு பணிகள்

தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப வாகனங்கள் அதிகரிக்கும்போது தரமான தார்சாலையும், பஸ், லாரி, வேன்கள், கார்கள் மற்றும் இரு சக்கர வாகனங்கள் என போக்குவரத்து அதிகரிக்கும்போது சாலை மேம்பாட்டுப் பணிகளும் செய்யப்படுகிறது.

அதன்படி தற்போது ஈரோடு-பவானி-மேட்டூர்-தொப்பூர் வரையில் 85 கி.மீ. தொலைவுக்கு தேசிய நெடுஞ்சாலையாக மாற்ற நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுத்தனர். இதைத்தொடர்ந்து 7 மீட்டர் அகலம் கொண்ட இந்த சாலையை 10 மீட்டராக விரிவாக்கம் செய்து, அம்மாபேட்டை உள்ளிட்ட 20 இடங்களில் சுங்கச்சாவடிகள் அமைக்க முடிவு செய்யப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.

மரங்கள் வெட்டி அகற்றம்

ரோட்டின் இருபுறங்களிலும் தலா 1.50 மீட்டருக்கு தார்சாலையும், மண்சாலையும் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த ரோடு விரிவாக்கப் பணிகளுக்கு இடையூறாக உள்ள பழமை வாய்ந்த மரங்கள் வெட்டி அகற்றப்பட்டு வருகின்றன.

இதற்காக ஏற்கனவே வனத்துறையினர் மரங்களை அளவீடு செய்தனர். பின்னர் அதனை வெட்டி அகற்ற ஏலம் விடப்பட்டது. ஈரோடு மாவட்டத்தில் ராணாநகர் முதல் ஈரோடு-சேலம் மாவட்ட எல்லையான பெரும்பள்ளம் வரையிலான மேட்டூர் ரோட்டில் 950 மரங்கள் வெட்டப்படுகின்றன.

அம்மாபேட்டை

தற்போது, அம்மாபேட்டை, நெரிஞ்சிப்பேட்டை, சின்னப்பள்ளம், சிங்கம்பேட்டை, கோனேரிபட்டி பிரிவு, ஆனந்தம்பாளையம் ஆகிய பகுதிகளில் மரங்கள் வேரோடு சாய்க்கப்பட்டு, எந்திரங்களைக் கொண்டு வெட்டி துண்டுகளாக்கி வாகனங்கள் மூலம் அகற்றப்பட்டு வருகின்றன. இதனால் சமூக ஆர்வலர்கள் வேதனையடைந்துள்ளனர்.


Next Story