தூய்மை பணியாளர் பலி


தூய்மை பணியாளர் பலி
x

குடவாசல் அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் தூய்மை பணியாளர் உயிரிழந்தார்.

திருவாரூர்

குடவாசல்;

குடவாசல் அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் தூய்மை பணியாளர் உயிரிழந்தார்.

தூய்மை பணியாளர்

திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே உள்ள 51 புதுக்குடி கீழத்தெருவை சேர்ந்தவர் கருப்பையன்(வயது45). இவர் புதுக்குடி ஊராட்சியில் சுகாதார தூய்மை பணியாளராக பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் கருப்பையன் தனது அண்ணன் செல்வத்துடன் மோட்டார் சைக்கிளில் காப்பனாமங்கலத்துக்கு டி.வி.யில் ஏற்பட்ட பழுதை நீக்க சென்றார்.இதன் பின் அவர்கள் திரும்பி சிமிழி அருகே வந்த போது, பின்புறம் வந்த லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் கருப்பையன் சம்பவ இடத்திலேயே இறந்தாா். மோட்டார் சைக்கிளை ஓட்டிவந்த செல்வம் படுகாயமடைந்தார்.

விசாரணை

இதுகுறித்து தகவல் அறிந்த குடவாசல் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று கருப்பையன் உடலை கைப்பற்றி திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர்.விசாரணையில் லாரியை ஓட்டி வந்தவர் குடவாசல் அருகே உள்ள காங்கேயநகரத்தைச் சேர்ந்த ஆரோக்கியசாமி மகன் அசோக் என தெரியவந்தது. அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.


Next Story