கூலித்தொழிலாளி பலி; நண்பர் படுகாயம்


கூலித்தொழிலாளி பலி; நண்பர் படுகாயம்
x

கபிஸ்தலம் அருகே மோட்டார் சைக்கிள் மீது டிராக்டர் மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா். அவரது நண்பர் படுகாயமடைந்தார்.

தஞ்சாவூர்

கபிஸ்தலம்;

கபிஸ்தலம் அருகே மோட்டார் சைக்கிள் மீது டிராக்டர் மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா். அவரது நண்பர் படுகாயமடைந்தார்.

டிராக்டர் மோதியது

கபிஸ்தலம் அருகே உள்ள ஈச்சங்குடி காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பழனிச்சாமி(வயது46). விவசாய கூலித் தொழிலாளி. நேற்று இவரும் இவரது நண்பர் அதே ஊரை சேர்ந்த ஜென்மராஜ் என்பவரும் விவசாய பணிகளுக்கு செல்ல ஈச்சங்குடியில் இருந்து கும்பகோணத்தை நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றனர்.கபிஸ்தலம் அரசு மருத்துவமனை அருகில் அவர்கள் சென்ற போது பின்புறம் அதிவேகமாக மணல் ஏற்றி வந்த டிராக்டர் எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த பழனிச்சாமி, ஜென்மராஜ் ஆகிய இருவரும் சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

பரிதாப சாவு

அங்கிருந்து மேல் சிகிச்சைக்கு பழனிச்சாமி தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் செல்லும் வழியிலேயே பழனிச்சாமி இறந்தார். ஜென்மராஜ் கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து கபிஸ்தலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து டிராக்டர் டிரைவரை வலை வீசி தேடி வருகின்றனர்.


Next Story