மோட்டார் சைக்கிளில் சென்றவர் சாவு


மோட்டார் சைக்கிளில் சென்றவர் சாவு
x

மோட்டார் சைக்கிளில் சென்றவர் அரசு பஸ் மோதி இறந்தார்.

தஞ்சாவூர்

திருக்காட்டுப்பள்ளி;

திருவையாறு அருகே உள்ள மணக்கரம்பை வாணியத்தெருவை சேர்ந்தவர் ராஜ்குமார்(வயது48). இவர் நேற்று தனது மோட்டார் சைக்கிளில் கும்பகோணம் பைபாஸ் சாலை அருகில் சிறிய சாலையில் இருந்து மெயின் ரோட்டுக்கு ஏறியபோது திருவையாறில் இருந்து தஞ்சை நோக்கி வந்த டவுன் பஸ் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் ராஜ்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்து நடந்த உடன் பஸ் டிரைவர், கண்டக்டர் பஸ்சை அப்படியே நிறுத்திவிட்டு ஓடி விட்டனர். இது குறித்து நடுக்காவேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறர்கள்.


Next Story