தொழிலாளி பலி; 18 பேர் படுகாயம்
ஒரத்தநாடு அருகே லாரி மீது லோடு ஆட்டோ மோதியதில் தொழிலாளி உயிரிழந்தார். 18 பேர் படுகாயமடைந்தனர்.
ஒரத்தநாடு;
ஒரத்தநாடு அருகே லாரி மீது லோடு ஆட்டோ மோதியதில் தொழிலாளி உயிரிழந்தார். 18 பேர் படுகாயமடைந்தனர்.
லாரி மீது லோடு ஆட்டோ மோதியது
தஞ்சை மாவட்டம் திருவோணத்தை அடுத்துள்ள நெய்வேலி அவனாண்டிகொல்லை பகுதியை சேர்ந்த இருபதுக்கும் மேற்பட்டோர் நேற்று முன்தினம் புதுக்கோட்டை அருகே நடந்த துக்க நிகழ்ச்சிக்கு சென்று விட்டு நேற்று இரவு லோடு ஆட்டோவில் ஊர் திரும்பி கொண்டு இருந்தனர். லோடு ஆட்டோ பட்டுக்கோட்டை -கறம்பக்குடி சாலையில் நெய்வேலி வடதெரு சுடுகாடு அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது முன்னே சென்று கொண்டிருந்த லாரியை டிரைவர் திடீரென நிறுத்தினார். இதனால் எதிர்பாராதவிதமாக லோடு ஆட்டோ லாரி மீது மோதியது. இதில் நெய்வேலி அவனாண்டிக் கொல்லையை சேர்ந்த கருப்பையன் (வயது59) (தொழிலாளி) உள்ளிட்ட 19 பேர் படுகாயம் அடைந்தனர்.
பரிதாப சாவு
அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதில் கருப்பையன் மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார்.அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை பரிதாபமாக இறந்தார். மேலும் இதில் காயமடைந்த 18 பேர் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து வாட்டாத்திக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.