சாலையோரம் நடந்து சென்றவர் சாவு
அம்மாப்பேட்டை அருகே மோட்டார் சைக்கிள் மோதி சாலையோரம் நடந்து சென்றவர் உயிரிழந்தாா்.
தஞ்சாவூர்
அம்மாப்பேட்டை;
அம்மாப்பேட்டை அருக உள்ள சாலியமங்கலம் புதிய பைபாஸ் சாலையில் சாலையோரம் 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத மோட்டார் சைக்கிள் அவர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த அம்மாப்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உயிரிழந்தவர் உடலை மீட்டு தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து காரணமான வாகனம் குறித்தும் வாகனத்தை ஓட்டி வந்தது யார்? அவர் எந்த ஊரை சேர்ந்தவர் ? உயிரிழந்தவர் யார்? என்பது குறித்து அம்மாப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story