கொத்தனாா் உடல் நசுங்கி சாவு


கொத்தனாா் உடல் நசுங்கி சாவு
x

மன்னார்குடி அருகே மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதிய விபத்தில் கொத்தனார் உடல் நசுங்கி உயிரிழந்தார். இது தொடர்பாக பஸ் டிரைவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்

திருவாரூர்

மன்னார்குடி;

மன்னார்குடி அருகே மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதிய விபத்தில் கொத்தனார் உடல் நசுங்கி உயிரிழந்தார். இது தொடர்பாக பஸ் டிரைவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கொத்தனார்

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள சோத்திரியம் இருள்நீக்கி கிராமத்தை சேர்ந்தவர் கோபு. இவருடைய மகன் அம்பேத்கர் (வயது24). இவரது நண்பர் கருப்புகிளார் பகுதியை சேர்ந்த அருள்தாஸ்(40). கொத்தனாரான இவர்கள் இருவரும் மன்னார்குடி அருகே வேலைக்கு செல்வதற்கு நேற்று காலை மோட்டார் சைக்கிளில் சென்றனர்.மோட்டார் சைக்கிளை அம்பேத்கர் ஓட்டினார். மன்னார்குடி காமராஜர் சிலை சந்திப்பு அருகே இவர்கள் சென்ற போது எதிரே வந்த அரசு பஸ் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

பரிதாப சாவு

இதில் மோட்டார் சைக்கிள் கவிழ்ந்து அம்பேத்கர் பஸ்சின் பின் சக்கரத்தில் சிக்கி தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அருள்தாஸ் காயமின்றி உயிர் தப்பினார். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த மன்னார்குடி போலீசார் அம்பேத்கர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மன்னார்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பஸ்சை ஓட்டிய நாகை மாவட்டம் வாய்மேடு அருகே உள்ள உடையார் தேவன்காடு பகுதியை சேர்ந்த பழனிவேலை(45) கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story