சேலம் அருகே சாலை விபத்து: 5 பேர் பலி; 6 பேர் காயம்
சேலம் மாவட்டம் ஆத்தூர் புறவழிச் சாலையில் கார் மீது ஆம்னி பஸ் மோதி விபத்தில் 5 பேர் சம்பவ இடத்தில் பலியானார்கள். இதில் 6 பேர் படுகாயம் அடைந்தனர்.
சேலம்,
சேலம் மாவட்டம், ஆத்தூர் பகுதியைச் சேர்ந்த 11 பேர், ஆம்னி காரில், ஒட்டம் பாறை பகுதிக்கு ஆத்தூர் புறவழிச் சாலை வழியாக சென்றனர். அப்போது சேலத்தில் இருந்து சென்னை நோக்கி சென்ற ஆம்னி பஸ் கார் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் சந்தியா, 20, சரண்யா,26, ராஜேஷ், 29, ரம்யா, 25, சுகன்யா, 28, ஆகிய ஐந்து பேர் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர் மேலும் தன்சிகா, 11, பெரியண்ணன், 38, புவனேஸ்வரி, 17, கிருஷ்ணவேணி, 45, உதயகுமார், 17, சுதா, 36, ஆகிய ஆறு பேர், மேல்சிகிச்சைக்கு சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து ஆர்.டி.ஓ. சரண்யா மற்றும் டி.எஸ்.பி., ராமச்சந்திரன் நேரில் விசாரணை மேற்கொண்டனர்.
Related Tags :
Next Story