தவறி விழுந்த மூதாட்டி சாவு
பட்டுக்கோட்டை அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த மூதாட்டி உயிரிழந்தார்.
பட்டுக்கோட்டை;
பட்டுக்கோட்டை அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த மூதாட்டி உயிரிழந்தார்.
தவறி விழுந்தார்
பேராவூரணி தாலுகா உடையநாடு கிராமத்தை சேர்ந்தவர் உமர் ஹத்தா. இவருடைய மனைவி ஹமீதுபாத்திமா(வயது56). இவர்களுடைய மகன் முகமதுவாபிக். சம்பவத்தன்று முகமதுவாபிக் தனது தாய் ஹமீது பாத்திமாவை அழைத்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில் பட்டுக்கோட்டைக்கு வந்து விட்டு வேலை முடிந்த பின் மீண்டும் பட்டுக்கோட்டையிலிருந்து உடையநாடு நோக்கி சென்றார். பட்டுக்கோட்டையை அடுத்த கார்காவயல் கிராமத்தில் சென்ற போது அங்கு அமைக்கப்பட்டு இருந்த வேகத்தடையில் மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறியதில், ஹமீது பாத்திமா கீழே விழுந்து தலையில் பலத்த காயமடைந்தார்.
பரிதாப சாவு
அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பட்டுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி ஹமீது பாத்திமா இறந்தார். இது குறித்து பட்டுக்கோட்டை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.