மாணவர் உள்பட 2 பேர் பலி


மாணவர் உள்பட 2 பேர் பலி
x

வடுவூர் அருகே மோட்டார் சைக்கிளும், ஸ்கூட்டரும் மோதிக்கொண்ட விபத்தில் மாணவர் உள்பட 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

திருவாரூர்

வடுவூர்;

வடுவூர் அருகே மோட்டார் சைக்கிளும், ஸ்கூட்டரும் மோதிக்கொண்ட விபத்தில் மாணவர் உள்பட 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மோட்டார் சைக்கிள்-ஸ்கூட்டர் மோதல்

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அண்ணாமலைநாதர் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜோதிபாசு(வயது 50). சோப்பு வியாபாரி. நேற்று முன்தினம் இரவு இவர் மன்னார்குடியில் இருந்து வடுவூர் நோக்கி தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.செருமங்கலம் கிராம நி்ர்வாக அலுவலகம் எதிரே அவா் சென்று கொண்டிருந்தபோது அதே பகுதியை சேர்ந்த ராஜா மகன் ஜெயச்சந்திரன்(20) ஓட்டி வந்த ஸ்கூட்டரும், ஜோதிபாசு ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.

பரிதாப சாவு

இதில் சம்பவ இடத்திலேயே ஜெயச்சந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயம் அடைந்த ஜோதிபாசு, திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவரும் உயிரிழந்தார்.விபத்தில் உயிரிழந்த ஜெயச்சந்திரன் மன்னார்குடி அரசு கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.இது குறித்து வடுவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story