மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதி வாலிபா் பலி


மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதி வாலிபா் பலி
x

தஞ்சை அருகே வண்ணாரப்பேட்டை புதுஆற்றுப்பாலம் பகுதியில் மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதியதில் வாலிபர் உயிரிழந்தார்.

தஞ்சாவூர்

வல்லம்;

தஞ்சை அருகே வண்ணாரப்பேட்டை புதுஆற்றுப்பாலம் பகுதியில் மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதியதில் வாலிபர் உயிரிழந்தார்.

வேன் மோதியது

தஞ்சை மனோஜிப்பட்டியை சேர்ந்தவர் தேவதாஸ். இவருடைய மகன் வெங்கடேசன்(வயது24). இவர் நேற்று முன் தினம்இரவு வண்ணாரப்பேட்டைக்கு அவருடைய மோட்டார் சைக்கிளில் சென்று விட்டு வீரமணி என்பவருடன் மீண்டும் மோட்டார் சைக்கிளில் ஊருக்கு திரும்பி வந்து கொண்டு இருந்தார்.வண்ணாரப்பேட்டை புது ஆற்றுப்பாலம் பகுதியில் தஞ்சை செல்லும் சாலையில் இவர்கள் திரும்பிய போது திருவையாறில் இருந்து தஞ்சை நோக்கி வந்த வேன் வெங்கடேசன் ஒட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் சாலையில் தூக்கி வீசப்பட்ட வெங்கடேசன் உயிரிழந்தார். பின்னால் உட்கார்ந்து வந்த வீரமணி படுகாயம் அடைந்தார்.

சிகிச்சை

இது குறித்து தகவல் அறிந்த வல்லம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று வெங்கடேசனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். படுகாயமடைந்த வீரமணி சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இதுகுறித்து வெங்கடேசனின் தந்தை தேவதாஸ் கொடுத்துள்ளபுகாரின் பேரில் வல்லம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story