கம்பம், ஆண்டிப்பட்டியில் அ.தி.மு.க.வினர் சாலை மறியல்


கம்பம், ஆண்டிப்பட்டியில் அ.தி.மு.க.வினர் சாலை மறியல்
x

சென்னையில் எடப்பாடி பழனிசாமி கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கம்பம், ஆண்டிப்பட்டியில் அ.தி.மு.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தேனி

சென்னையில் எடப்பாடி பழனிசாமி கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கம்பத்தில் முன்னாள் எம்.எல்.ஏ ஜக்கையன் தலைமையில் அ.தி.மு.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது எடப்பாடி பழனிசாமி மற்றும் எம்.எல்.ஏ.க்களை விடுதலை செய்யக்கோரியும், தி.மு.க. அரசை கண்டித்து அ.தி.மு.க.வினர் கோஷம் எழுப்பினர்.

இதில், மாவட்ட பொருளாளர் சோலைராஜ், முன்னாள் எம்.பி. பார்த்திபன், முன்னாள் மாவட்ட செயலாளர் சிவக்குமார், முன்னாள் ஒன்றிய செயலாளர் இளையநம்பி, மாவட்ட மாணவரணி செயலாளர் பாலமணிமார்பன், தேவாரம் பேரூர் செயலாளர் சீனிவாசன் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர். பின்னர் மறியலில் ஈடுபட்ட ஜக்கையன் உள்பட 35 பேரை கம்பம் போலீசார் கைது செய்து, தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

இதேபோல் ஆண்டிப்பட்டியில் அ.தி.மு.க. இளைஞரணி ஒன்றிய செயலாளர் பொன் முருகன் தலைமையில் அ.தி.மு.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து மறியலில் ஈடுபட்ட பொன் முருகன் உள்பட 11 பேரை ஆண்டிப்பட்டி போலீசார் கைது செய்தனர்.


Related Tags :
Next Story