பஞ்சாயத்து அலுவலகம் முன்பு சாலை மறியல்


பஞ்சாயத்து அலுவலகம் முன்பு சாலை மறியல்
x

பஞ்சாயத்து அலுவலகம் முன்பு பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருநெல்வேலி

பாளையங்கோட்டை பஞ்சாயத்து யூனியன் குன்னத்தூர் ஊராட்சி மன்றத்தில் வீடு கட்ட பிளான் அனுமதி வழங்க மறுப்பதை கண்டித்து சிக்கந்தர் பாட்ஷா என்பவர் தன் குடும்பத்துடன் நேற்று பஞ்சாயத்து அலுவலகம் முன்பு சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார்.

இதுபற்றி தகவல் அறிந்த பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹரிகரன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.


Next Story