4 இடங்களில் சாலை மறியல்
திருத்துறைப்பூண்டியில், 18-ந்தேதி 4 இடங்களில் சாலை மறியல் என இந்திய கம்யூனிஸ்டு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
திருவாரூர்
கோட்டூர்:
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றியக்குழு அவசர கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் தமிழ்செல்வி தலைமை தாங்கினார். மாநில கட்டுப்பாட்டு குழு தலைவர் பழனிசாமி, மாரிமுத்து எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ. உலகநாதன், ஒன்றியக்குழு தலைவர் பாஸ்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் பருவம் தவறி பெய்த கனமழையின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள சம்பா, தாளடி பயிர்களுக்கு விடுபடாமல் அனைத்து விவசாயிகளுக்கும் உடனடியாக ஏக்கருக்கு ரூ.35ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தி, திருத்துறைப்பூண்டி ஒன்றியத்தில் வருகிற 18-ந் தேதி(சனிக்கிழமை) விளக்குடிகிச்சன், கோட்டகம், பாமணி, ஆலத்தம்பாடி ஆகிய 4 இடங்களில் சாலைமறியல் நடத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
Related Tags :
Next Story