தூத்துக்குடியில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் சாலை மறியல்


தூத்துக்குடியில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் சாலை மறியல்
x
தினத்தந்தி 23 Sept 2022 12:15 AM IST (Updated: 23 Sept 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடி

தூத்துக்குடி:

தமிழகம் முழுவதும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பை சேர்ந்த பல்வேறு நிர்வாகிகளின் வீடு, அலுவலகங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் ஒரே நேரத்தில் சோதனை நடத்தினர். இதனை கண்டித்து தூத்துக்குடி மாநகர பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் தூத்துக்குடி பள்ளிவாசல் அருகே நேற்று மதியம் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். போராட்டத்துக்கு மாநகர செயலாளர் அப்துல்ரகுமான் தலைமை தாங்கினார். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தேசிய புலனாய்வு முகமையை கண்டித்து கோஷம் எழுப்பினர்.

இந்த திடீர் போராட்டத்தால் டபிள்யூ.ஜி.சி. ரோட்டில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உடனடியாக மத்தியபாகம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பேரில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.


Next Story