சீரான குடிநீர் வினியோகம் செய்யக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்


சீரான குடிநீர் வினியோகம் செய்யக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்
x

குடியாத்தம் அருகே சீரான குடிநீர் வினியோகம் செய்யக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

வேலூர்

குடியாத்தம் ஒன்றியம் செரூவங்கி ஊராட்சி ஆறாவது வார்டு உள்ள கார்த்திகேயபுரம் பகுதியில் கடந்த சில தினங்களாக சீரான குடிநீர் வழங்கவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். எனவே குடிநீர் பிரச்சினையை தீர்க்க நிரந்தர நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் காலி குடங்களுடன் குடியாத்தம்- மேல்பட்டி சாலையில் கார்த்திகேயபுரம் மெயின் ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் குடியாத்தம்-ஆம்பூர் இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தகவல் அறிந்த குடியாத்தம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது சீரான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி அளித்தனர் இதனை தொடர்ந்து சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற சாலை மறியல் கைவிடப்பட்டது


Next Story