சாலையை சீரமைக்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்
கொள்ளிடம் அருகே சாலையை சீரமைக்கக்கோரி பொதுமக்கள் சாைல மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கொள்ளிடம்:
கொள்ளிடம் அருகே சாலையை சீரமைக்கக்கோரி பொதுமக்கள் சாைல மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சேதமடைந்த சாைல
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே ஆரப்பள்ளம் புது தெரு, பெரியதெரு உள்ளிட்ட தெருக்களுக்கு சுமார் 15 ஆண்டுகளுக்கு மேல் சாலை வசதி இல்லை. இதனால் அப்பகுதி மக்கள் மிகவும் அவதிப்பட்டு வந்தனர். சுமார் 2 கிலோமீட்டர் தூரம் உள்ள இந்த சாைலயில் ஜல்லிகள் பெயர்ந்து வாகனங்கள் செல்ல முடியாத அளவிற்கு மோசமான நிலையில் உள்ளது. குறிப்பாக மழைக்காலங்களில் இந்த பகுதிக்கு செல்ல முடியாத அளவு சாைல மிக மோசமாக உள்ளது.
பேச்சுவார்த்தை
இந்தநிலையில் சாலையை சீரமைக்கக்கோரி கிராம மக்கள் நேற்று அளக்குடி- கொள்ளிடம் சாலையில் ஆரப்பள்ளம் புதுத்தெரு அருகில் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து தகவல் அறிந்த ஒன்றியக்குழு தலைவர் ஜெயபிரகாஷ் மற்றும் துணை போலீஸ் சூப்பிரண்டு லாமேக் தலையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.
போக்குவரத்து பாதிப்பு
பேச்சுவார்த்தையில் இன்னும் 2 நாட்களுக்குள் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாாிகள் உறுதி அளித்தனர். இதன்போில் பொதுமக்கள் கலைந்து சென்றனா்.
சாலை மறியல் காரணமாக கொள்ளிடம்- அளக்குடி இடையே சுமார் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.