காலிக்குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்


காலிக்குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்
x

அருப்புக்கோட்டையில் குடிநீர் வினியோகம் செய்யப்படாததை கண்டித்து காலிக்குடங்களுடன் பெண்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விருதுநகர்

அருப்புக்கோட்டை,

அருப்புக்கோட்டையில் குடிநீர் வினியோகம் செய்யப்படாததை கண்டித்து காலிக்குடங்களுடன் பெண்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சாலை மறியல்

அருப்புக்கோட்டை நகராட்சியில் 36 வார்டுகள் உள்ளன. இங்கு தாமிரபரணி மற்றும் வைகை கூட்டு குடிநீர் திட்டம் மூலம் சுழற்சி முறையில் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்தநிலையில் அருப்புக்கோட்டை நகராட்சிக்கு உட்பட்ட 32-வது வார்டு பகுதியில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக முறையான குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என புகார் தெரிவித்து அப்பகுதியை சேர்ந்த பெண்கள் நகர்மன்ற உறுப்பினர் ராமதிலகவதி தலைமையில் காலிக்குடங்களுடன் பந்தல்குடி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த டவுன் போலீசார் மற்றும் நகராட்சி அதிகாரிகள் போராட்டம் நடத்திய பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

போக்குவரத்து பாதிப்பு

அப்போது விரைவில் குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்வதாக அவர்கள் கூறினர். இதையடுத்து அவர்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.


Next Story