குடிநீர், சாலை வசதி கேட்டு சாலை மறியல்


குடிநீர், சாலை வசதி கேட்டு சாலை மறியல்
x

குடிநீர், சாலை வசதி கேட்டு சாலை மறியலில் கிராம மக்கள்

மதுரை

சோழவந்தான்,

சோழவந்தான் அருகே தேனூர் கிராமத்தில் உள்ள கல்லாங்குத்து 3-வது வார்டில் குடிதண்ணீர் மற்றும் சாலை வசதி வேண்டி வார்டு உறுப்பினர் முத்துக்குமார் தலைமையில் பொதுமக்கள் தேனூர் சோழவந்தான் சாலையில் மறியல் போராட்டம் செய்தனர். அப்போது பிளஸ்-2 தேர்வு எழுதும் மாணவிகள் வந்த பஸ் அங்கு வந்தது. மறியல் நடப்பதை பார்த்தும் பஸ்சில் இருந்த மாணவிகள், தேர்வு எழுத செல்ல தாமதமாகி விடும், எனவே பஸ் செல்ல வழி விடுங்கள் என கேட்டனர். இதையடுத்து அங்கு மறியலில் ஈடுபட்ட கிராம மக்கள் அந்த பஸ் செல்ல வழி விட்டனர். மறியல் குறித்து தகவல் அறிந்த போலீசார் மற்றும் கிராம நிர்வாக அதிகாரி ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அடிப்படை வசதிகளை செய்து தருவதாக கூறியதை தொடர்ந்து சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.


Next Story