சீரான குடிநீர் வழங்கக் கோரி சாலை மறியல்


சீரான குடிநீர் வழங்கக் கோரி சாலை மறியல்
x

சீரான குடிநீர் வழங்கக் கோரி சாலை மறியல் நடைபெற்றது.

வேலூர்

குடியாத்தம் நகராட்சி பிச்சனூர் தேரடி எஸ்.குப்பண்ண தெரு பகுதியில் சில வீடுகளுக்கு சரியானபடி குடிநீர் வரவில்லை என கூறப்படுகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு அப்பகுதியில் குடிநீர் குழாயில் அடைப்பு ஏற்பட்டு இருந்தது. நகராட்சி தலைவர் எஸ்.சவுந்தரராசன், நகர மன்ற உறுப்பினர் புவியரசி உள்ளிட்டோர் மேற்பார்வையில் அடைப்புகளை நீக்கி மீண்டும் சீரான குடிநீர் வழங்கினார்கள்.

தற்போது மீண்டும் அப்பகுதியில் தேவையான அளவு குடிநீர் வரவில்லை எனக் கூறி முன்னாள் நகர மன்ற உறுப்பினர் ராணி தலைமையில், பெண்கள் சிலர் திடீரென அப்பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்ததும் விரைந்து வந்த நகராட்சி ஊழியர் குமரேசன் உடனடியாக தேவையான அளவு குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். இதனைதொடர்ந்து சாலை மறியல் கைவிடப்பட்டது.


Next Story