மேலப்பிடாகையில் சாலை மறியல்


மேலப்பிடாகையில் சாலை மறியல்
x
தினத்தந்தி 5 July 2023 12:15 AM IST (Updated: 5 July 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கடைமடை பகுதிக்கு தண்ணீர் வராததை கண்டித்து மேலப்பிடாகையில் சாலை மறியல் ;மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு சார்பில் நடந்தது

நாகப்பட்டினம்

வேளாங்கண்ணி:

குறுவை சாகுபடி செய்வதற்கு மேட்டூர் அணையிலிருந்து கடந்த ஜூன் மாதம் 12-ந் தேதி தண்ணீர் திறந்து விடப்பட்டது. ஆனால் இதுநாள் வரையில் டெல்டா மாவட்ட கடைமடை பகுதிகளுக்கு பாசனத்திற்கான தண்ணீர் வந்து சேரவில்லை. நேரடி நெல் விதைப்பின் மூலம் நெல் விதைத்து 15 நாட்கள் ஆகியும் குறுவை சாகுபடிக்கு தண்ணீர் இல்லாமல் விதைத்த விதை முளைக்காமல் கிடக்கிறது. எனவே கடைமடை பகுதிக்கு தண்ணீர் வராததை கண்டித்தும், முறை வைக்காமல் குறுவை சாகுபடிக்கான பாசன தண்ணீரை அதிகமாக திறந்து விடக்கோரியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு சார்பில் மேலப்பிடாகை கடத்தெருவில் சாலை மறியலில் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு கீழையூர் மேற்கு ஒன்றிய செயலாளர் வெங்கட்ராமன் தலைமை தாங்கினார். இதில் மாவட்டசெயலாளர் மாரிமுத்து கலந்துகொண்டு பேசினார். இதுகுறித்து தகவல் அறிந்த உதவி செயற்பொறியாளர் சிதம்பரநாதன், பொறியாளர் தங்கமுத்து, திருக்குவளை தாசில்தார் சுதர்சன், கீழ்வேளூர் தாசில்தார் ரமேஷ் ஆகியோர் போராட்டகாரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, 2 நாட்களில் தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக கூறினர். அதில் உடன்பாடு ஏற்பட்டதால் சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. இதனால் நாகை -திருத்துறைப்பூண்டி சாலையில் சுமார் 1 மணி நேரம் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.


Next Story