இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில்விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தக்கோரி சாலை மறியல்44 பேர் கைது

இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில்விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தக்கோரி சாலை மறியல்44 பேர் கைது
x

இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில்விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தக்கோரி நடந்த சாலை மறியலில் 44 பேர் கைது செய்யப்பட்டனர்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில்விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தக்கோரி நடந்த சாலை மறியலில் 44 பேர் கைது செய்யப்பட்டனர்.

நாட்டில் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், மின்சார மசோதாவை திரும்ப பெற வேண்டும், தமிழகத்தில் வீட்டு வரி உயர்வு மற்றும் மின்சார கட்டண உயர்வு ஆகியவற்றை திரும்ப பெற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் நேற்று போராட்டங்கள் நடந்தன.

குமரி மாவட்டத்தை பொறுத்த வரையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்டக்குழு சார்பில் நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையம் அருகே உள்ள இந்தியன் வங்கி முன் சாலை மறியல் போராட்டம் நடந்தது.

இதற்கு கட்சியின் மாவட்ட செயலாளர் சுபாஷ் சந்திரபோஸ் தலைமை தாங்கினார். தாமரைசிங், சுரேஷ் மேசியா, நாராயணசாமி உள்பட பலர் கலந்து கொண்டு தங்களது கோரிக்கையை வலியுறுத்தி சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்துக்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை. எனினும் தடையை மீறி மறியலில் ஈடுபட்ட 44 பேர் கைது செய்யப்பட்டு ஒரு திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டனர். சாலை மறியல் காரணமாக அண்ணா பஸ் நிலையம் முன் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story