ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி சாலை மறியல்
திருவெறும்பூர் அருகே ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
திருச்சி
திருவெறும்பூர்,ஜூன்.15-
திருவெறும்பூர் அருகே உள்ள வாழவந்தான் கோட்டையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி வடிகால் அமைத்து தராத மாவட்ட, ஒன்றிய நிர்வாகத்தை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்துக்கு கட்சியின் தாலுகா குழு உறுப்பினர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். இது குறித்து தகவல் அறிந்த துவாக்குடி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட 50-க்கும் மேற்பட்டவர்களை கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்தனர். பின்னர் அவர்கள் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.
Related Tags :
Next Story