சாலை அமைக்கும் பணி
நெல்லை மாநகராட்சி 12-வது வார்டில் சாலை அமைக்கும் பணியை அப்துல் வகாப் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
திருநெல்வேலி
நெல்லை மாநகராட்சி தச்சநல்லூர் மண்டலத்திற்குட்பட்ட 12-வது வார்டில் சாலைதெரு, பைபாஸ் சாலை முதல் நெல்லை சந்திப்பு வரை 1.2 கிலோமீட்டர் தூரத்திற்கு சாலை அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டு விழா நடந்தது. நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் அப்துல்வகாப் எம்.எல்.ஏ. பணியை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் துணை மேயர் கே.ஆர்.ராஜூ, தச்சநல்லூர் மண்டல தலைவர் ரேவதி பிரபு, கவுன்சிலர் கோகிலவாணி, நெல்லை மாவட்ட தி.மு.க. துணைச் செயலாளர் எஸ்.வி.சுரேஷ், மாநகர துணைச்செயலாளர் மூளிகுளம் பிரபு உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story