ஓடை நீர் செல்வதற்காக சாலை துண்டிப்பு
ஓடை நீர் செல்ல தடையாக உள்ளதால், சாலை துண்டிக்கப்பட்டுள்ளது.
திருப்பத்தூர்
நாட்டறம்பள்ளி தாலுகா பெரியாண்டவர் கோவில் அருகே சரஸ்வதி ஆற்றின் துணை ஆறு உள்ள பகுதியில் ஓடை ஆற்றுப் பகுதியில் தார் சாலை உள்ளது. இந்த தார் சாலை வெள்ளநாய்க்கனேரி பகுதிக்கு செல்கிறது. இந்த சாலையில் தினமும் நூற்றுக்கணக்கான மக்கள் சென்று வருகிறார்கள். இந்த சாலை, பெரியாண்டவர் கோவில் அருகே ஓடை நீர் செல்ல தடையாக உள்ளதால், சாலை துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அந்த இடத்தில் தரைப்பாலம் அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story