அம்பலூர் பாலாற்றில் மணல் கடத்தலை தடுக்க பாதை துண்டிப்பு


அம்பலூர் பாலாற்றில் மணல் கடத்தலை தடுக்க பாதை துண்டிப்பு
x

அம்பலூா் பாலாற்றில் மணல் கடத்தலை தடுக்க பள்ளங்கள் தோண்டி பாதை துண்டிக்கப்பட்டது.

திருப்பத்தூர்

வாணியம்பாடி

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி, அம்பலூர், திம்மாம்பேட்டை பகுதிகளில் பாலாற்றில் தொடர்ந்து மணல் கடத்தல் சம்பவம் நடந்து வருகிறது. அம்பலூர் பகுதி பாலாற்றில் இருந்து தினமும் அதிகளவில் லாரிகள், மாட்டு வண்டிகள், டிராக்டர்கள் மூலமாக மணல் கடத்தல் சம்பவம் நடந்து வந்தது.

மணல் கடத்தலை தடுக்க ஊராட்சி மன்ற தலைவர் ஏ.பி.முருகேசன் தலைமையில் வருவாய்த்துறையினர் பாலாற்றில் இருந்து மணல் கடத்தி வரும் பகுதிகளில் ெபாக்லைன் எந்திரம் மூலம் பெரிய அளவில் பள்ளங்கள் தோண்டி வாகனங்கள் செல்ல முடியாதவாறு பாதைைய துண்டித்து, தடுப்பு நடவடிக்கையை மேற்கொண்டனர்.


Next Story