திற்பரப்பில் கல்மண்டத்துக்கு செல்லும் பாதை துண்டிப்பு


திற்பரப்பில் கல்மண்டத்துக்கு செல்லும் பாதை துண்டிப்பு
x
தினத்தந்தி 22 Nov 2022 12:15 AM IST (Updated: 22 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

திற்பரப்பில் கோதையாற்றின் நடுவே உள்ள கல் மண்டபத்துக்கு செல்லும் பாதை துண்டிக்கப்பட்டதால் பழமை மாறாமல் சீரமைக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கன்னியாகுமரி

திருவட்டார்,

திற்பரப்பில் கோதையாற்றின் நடுவே உள்ள கல் மண்டபத்துக்கு செல்லும் பாதை துண்டிக்கப்பட்டதால் பழமை மாறாமல் சீரமைக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கல் மண்டபம்

திற்பரப்பு அருவியின் மேல் பகுதியில் கோதையாற்றை ரசிக்கவும், அருவியின் எதிர்புறம் இயற்கை அழகை ரசிக்கவும் திருவிதாங்கூர் மன்னர் ஆட்சிக் காலத்தில் ஆற்றின் நடுவே கல் மண்டபம் கட்டப்பட்டது. இந்த கல்மண்டபத்துக்கு செல்லும் வகையில் கற்களால் பாலம் கட்டி பாதையும் அமைக்கப்பட்டது. இந்த கல்பாலம் வழியாக சுற்றுலா பயணிகள் கல்மண்டபத்துக்கு சென்று இயற்கை அழகை ரசிப்பார்கள். மேலும், திற்பரப்பு மகா தேவர் கோவில் தொடர்பான பூஜைகளும் இந்த கல்மண்டபத்தில் நடைபெறும்.

கடந்த 2010-ம் ஆண்டு பெருவெள்ளப்பெருக்கு ஏற்பட்ட போது கல் மண்டபத்துக்கு செல்லும் பாதை முழுமையாக தகர்ந்தது. பின்னர் அதை ஓரளவு சரி செய்து பழைய நிலைமைக்கு கொண்டு வந்தனர்.

மீண்டும் ேசதம்

இதையடுத்து கடந்த ஆண்டு கோதையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட போது இந்த பாதை மீண்டும் சேதமடைந்து வெள்ளத்தில் இழுத்து செல்லப்பட்டது. இதனால் கோதையாற்றை ரசிப்பதற்காக சுற்றுலா பயணிகள் கல்மண்டபத்துக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், கல்மண்டபத்தில் கோவில் தொடர்பான பூஜைகளும் நடத்த இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள், முறையாக ஆய்வு செய்து, இனிமேல் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டாலும் இந்த பாதை அடித்துச்செல்லாத வகையில் பழமை மாறாமல், உறுதியாக கல்பாலத்தை சீரமைக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story