சேதமடைந்த சாலை சீரமைக்கப்படுமா
திருவாரூர் ஒழங்குமுறை விற்பனை கூடத்துக்கு செல்லும் பழுதடைந்த சாலை சீரமைக்கப்படுமா? என விவசாயிகள் எதிர்பார்த்து உள்ளனர்.
திருவாரூர் ஒழங்குமுறை விற்பனை கூடத்துக்கு செல்லும் பழுதடைந்த சாலை சீரமைக்கப்படுமா? என விவசாயிகள் எதிர்பார்த்து உள்ளனர்.
ஒழுங்குமுறை விற்பனை கூடம்
திருவாரூர் ரெயில்வே மேம்பாலம் அருகில் நாகை பை-பாஸ் சாலை பகுதியில் வேளாண்மை ஒழுங்குமுறை விற்பனை கூடம் அமைந்துள்ளது. இங்கு உளுந்து, பச்சை பயிறு, பருத்தி போன்ற விளைபொருட்கள் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. மேலும் வேளாண் விளை பொருட்களுக்கு பொருளீட்டு கடன் வழங்கப்படுகிறது. இங்கு பருத்தி கொள்முதல் என்பது மிக முக்கியமாக இருந்து வருகிறது.இதனால் வேன், டிராக்டர், லாரி போன்ற கனரக வாகனங்களும் இந்த வழியாக சென்று வருகின்றன.
ஆபத்து
நாகை பை-பாஸ் சாலையில் இருந்து ஒழுங்குமுறை விற்பனை கூடம் செல்வதற்கு இணைப்பு சாலை போடப்பட்டு பல ஆண்டுகள் கடந்த நிலையில் மிகவும் பழுதடைந்து கப்பிகள் பெயர்ந்து காட்சி அளிக்கிறது.குறிப்பாக நாகை பைபாஸ் சாலையில் இருந்து ஒழுங்குமுறை விற்பனை கூட இணைப்பு சாலை பிரியும் இடத்தில் எந்தவித வேகத்தடையும் இல்லாமல் உள்ளது. இதனால் விளை பொருட்களை ஏற்றி கொண்டு வரும் வாகனங்கள் நாகை பைபாஸ் சாலையில் இருந்து ஒழுங்குமுறை விற்பனை கூட இணைப்பு சாலையில் திரும்பும்போதும், ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் இருந்து வாகனங்கள் பைபாஸ் சாலையில் ஏறும் போது ஆபத்தான நிலை உள்ளது.
சீரமைக்க கோரிக்கை
எனவே நாகை பைபாஸ் சாலையில் இருந்து ஒழுங்குமுறை விற்பனை கூடத்துக்கு செல்லும் இடத்தில் வேகத்தடை அமைக்க வேண்டும். குறிப்பாக போக்குவரத்துக்கு பயனற்ற நிலையில் உள்ள பழுதடைந்த ஒழுங்குமுறை விற்பனை கூட சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.