வடுவூர் கடைவீதியில் சாலை அகலப்படுத்தும் பணி
வடுவூர் கடைவீதியில் சாலை அகலப்படுத்தும் பணி நடந்து வருகிறது.
வடுவூர் கடைவீதியில் சாலை அகலப்படுத்தும் பணி நடந்து வருகிறது.
அகலப்படுத்தும் பணி
தஞ்சை-மன்னார்குடி இடையிலான சாலையை அகலப்படுத்தும் பணி நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக வடுவூர் கடைவீதியில் இருந்த கட்டிடங்கள், வீடுகள் ஆகியவற்றின் ஒரு பகுதி இடிக்கப்பட்டு தற்போது சாலை அகலப்படுத்தும் பணி தொடங்கி நடந்து வருகிறது.
இந்த சாலை பணிக்கான திட்டமிடல் தொடங்கியபோது வடுவூரில் புறவழிச்சாலை அமைக்கும் திட்டம் தயாரிக்கப்பட்டது. அதன் பின்னர் பல்வேறு கட்டங்களாக வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்களிடையே கருத்துகேட்பு கூட்டம் நடத்தப்பட்டது.
இழப்பீடு
இதில் வடுவூர் கடைவீதியில் ஏற்கனவே உள்ளபடி சாலை செல்வதெனவும், இடிபடும் கடை கட்டிடங்கள் மற்றும் வீடுகளுக்கு இழப்பீடு வழங்குவதெனவும் முடிவு செய்யப்பட்டு இருந்தது.
இதன்படி இடிபாடுகளுக்கு உட்பட்ட கட்டிடங்களுக்கு நெடுஞ்சாலை துறை இழப்பீடு வழங்கியது. சாலையை அகலப்படுத்துவது பயன் அளிக்கும் என வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.