பாலக்கோட்டில் சாலை பாதுகாப்பு வார விழா
பாலக்கோடு:
போக்குவரத்து துறை சார்பில் மாநிலம் முழுவதும் ஜனவரி 11-ந் தேதி முதல் 17-ந் தேதி வரை சாலை பாதுகாப்பு வார விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி தர்மபுரி வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் பாலக்கோடு சர்க்கரை ஆலையில் சாலை பாதுகாப்பு வார விழா கொண்டாடப்பட்டது. இதற்கு வட்டார போக்குவரத்து அலுவலர் தாமோதரன் தலைமை தாங்கினார். தொடர்ந்து சர்க்கரை ஆலைக்கு கரும்புகளை ஏற்றி வந்த மாட்டு வண்டி, டிராக்டர், லாரி உள்ளிட்ட வாகனங்களில் பிரதிபலிப்பு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது. மேலும் 4 சக்கர வாகன ஓட்டிகள் கண்டிப்பாக சீல்பெல்ட் அணிய வேண்டும் என்றும், மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் தலைக்கவசம் அணிய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது. மதுகுடித்து விட்டு வாகனம் ஓட்டக்கூடாது, திருப்பங்களில் வாகனங்களை முந்தி செல்லக்கூடாது, போக்குவரத்து விதிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் மோட்டார் வாகன ஆய்வாளர் வெங்கிடுசாமி, சர்க்கரை ஆலை மேலாண்மை இயக்குனர் சக்திவேல் மற்றும் சர்க்கரை ஆலை பணியாளர்கள், ஓட்டுனர் பயற்சி பள்ளி உரிமையாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.