சாலை ஆய்வாளர் பணிக்கான தேர்வு


சாலை ஆய்வாளர் பணிக்கான தேர்வு
x

வேலூர் மாவட்டத்தில் சாலை ஆய்வாளர் பணிக்கான தேர்வை 1,221 பேர் எழுதினர்.

வேலூர்

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) சார்பில் சாலை ஆய்வாளர் பணிக்கான எழுத்து தேர்வு அறிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த பணிக்கான எழுத்துத்தேர்வு சென்னை, வேலூர், கோவை, மதுரை, சேலம், திருச்சி, தஞ்சாவூர் உள்பட 15 நகரங்களில் நடைபெற்றது.

வேலூர் மாவட்டத்தில் இத்தேர்வினை எழுத 2,112 பேர் விண்ணப்பித்துள்ளனர். அவர்கள், வேலூர் அரசு முஸ்லிம் மேல்நிலைப்பள்ளி, ஊரீசு மேல்நிலைப்பள்ளி, சாந்தி நிகேதன் மெட்ரிக்பள்ளி, தோட்டப்பாளையம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ஹோலிகிராஸ் மெட்ரிக்பள்ளி, சத்துவாச்சாரி அரசு மேல்நிலைப்பள்ளி, வெங்கடேஸ்வரா பள்ளி, சினேகதீபம் மெட்ரிக் பள்ளி ஆகிய 8 மையங்களில் தேர்வு எழுதினர்.

தேர்வு மையங்களுக்குள் செல்போன், கால்குலேட்டர் போன்ற எலக்ட்ரானிக் பொருட்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டது.

வெங்கடேஸ்வரா பள்ளியில் நடந்த தேர்வினை வேலூர் மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த தேர்வினை 1,221 பேர் எழுதினர். 891 பேர் எழுதவரவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story