இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் சாலைமறியல்


இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் சாலைமறியல்
x
திருப்பூர்


பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ், மருந்து உள்ளிட்ட பொருட்களின் விலை உயர்வுக்கு மத்திய அரசை கண்டித்தும், தமிழக அரசு உயர்த்தியுள்ள வீட்டுவரி, சொத்து வரி மற்றும் மின்கட்டணம் உயர்வை ரத்து செய்யும்படி தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தும் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் உடுமலை கச்சேரி வீதியில் உள்ள தலைமை தபால் அலுவலகம் முன்பு நேற்று மறியல் போராட்டம்நடந்தது.பேராட்டத்திற்கு வி.சவுந்தரராஜன் தலைமை தாங்கினார். கே.எஸ்.ரணதேவ், எம்.நந்தகோபால், எம்.ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இதில் பலர் கலந்து கொண்டனர்.


Next Story