பொதுமக்கள் சாலை மறியல்
திருப்பூர் தாராபுரம் சாலை புது ரோடு அருகே சாலை நடுவே உள்ள (டிவைடர்) தடுப்பை அகற்றக்கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
1½ கிலோ மீட்டர் சுற்றி...
திருப்பூர் மாநகராட்சி 60-வது வார்டுக்குட்பட்ட மருதமலை ஆண்டவர் நகர், அம்பாள் நகர், ஜி.என். கார்டன், சேரன் நகர், அசோக் நகர், வெள்ளிவிழா காலனி, குமரன் நகர், ரேணுகா நகர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இவர்கள் அன்றாடம் புதுரோடு தாராபுரம் சாலையை கடந்து தான் பயணிக்க வேண்டும். அப்படி கடக்கும்போது நெடுஞ்சாலையில் எதிர் முனையில் ஒரு வழிப்பாதையில் பயணிக்க வேண்டிய சூழ்நிலை உருவாகி வருகிறது.
மறுமுனையில் சென்றால் 1½ கிலோ மீட்டர் சுற்றி பயணிக்க வேண்டிய நிலை உள்ளது. இதனால் பள்ளிக்குச்செல்லும் வாகனங்கள், தொழிலாளர்கள் விபத்துக்குள்ளாகி வருகின்றன. இதனால் அப்பகுதி பொதுமக்கள் தாராபுரம் நெடுஞ்சாலையில் நடுவில் உள்ள சிமெண்டு தடுப்பை (டிவைடர்)அகற்றி அதில் சாலையைக்கடக்க வழி ஏற்படும் செய்து தர வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
சாலை மறியல்
இது குறித்து அதிகாரிகளிடம் தெரிவித்தும் எந்த பயனும் இல்லாததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் திரளானோர் நேற்று காலை திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த நல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் போக்குவரத்து போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடையே பேச்சுவார்த்தை நடத்தினர்.
பின்னர் இதுகுறித்து தாசில்தார், நெடுஞ்சாலை துறை அதிகாரி மலர்விழி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொதுமக்களிடையே பிரச்சினை குறித்து கேட்டு அறிந்தனர்.
சர்வீஸ் ரோடு
அப்போது அதிகாரிகள் கூறுகையில், "தாராபுரம் சாைல நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ளதால் சாலை நடுவே உள்ள தடுப்பை அகற்றினால் விபத்துகள் ஏற்படும். எனவே மேல் அதிகாரிகளிடம் இதுகுறித்து பேசி உரிய அனுமதி பெற்ற பிறகு சாலை நடுவில் உள்ள தடுப்பை அகற்றி வழி செய்வதாக தெரிவித்தனர். மேலும் விபத்துகள் ஏற்படாதவாறு அருகில் சர்வீஸ் ரோடு அமைத்து தருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும்" என உறுதி அளித்தனர்.
இதையடுத்து அங்கிருந்த பொதுமக்கள் கலைந்து சென்றனர். இந்த சாலை மறியலால் தாராபுரம் நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
========
சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களை படத்தில் கா