விவசாயிகள் அமைத்த மண்சாலை திறப்பு


விவசாயிகள் அமைத்த மண்சாலை திறப்பு
x

விவசாயிகள் அமைத்த மண்சாலை திறக்கப்பட்டது.

திருவாரூர்

குடவாசல் அருகே உள்ள சீதக்கமங்கலம் ஊராட்சி மேலராமன்சேத்தி கிழக்கு பகுதியில் இருந்து அல்லிக்குளம் வரை 500 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. இந்த பகுதி விவசாயிகள் வயல்வெளிக்கு செல்ல சாலை வசதி இல்லாததால் இடுபொருட்களை எடுத்துச் செல்லவும், விளைவித்த நெல்லை வீட்டுக்கு எடுத்து வரவும் முடியாமல் மிகவும் சிரமப்பட்டு வந்தனர். இந்த நிலையில் விவசாயிகள் ஒன்று சேர்ந்து 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு ரூ.5 லட்சம் செலவில் (மேலராமன் சேத்தி சுடுகாட்டில் இருந்து அல்லிக்குளம் பனைமரத்துக்கரை வரை) வயல் வழியாக மண் சாலை அமைக்கும் பணியை மேற்கொண்டனர். இந்த சாலையின் திறப்பு விழா நடந்தது. விழாவிற்கு ஊராட்சி தலைவர் ராமலிங்கம் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் சரத்பாபு, விவசாயிகள் அன்பழகன், அய்யாதுரை, ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட விவசாயகள் சங்க செயலாளர் கலியபெருமாள் சாலையை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் மாவட்ட விவசாய சங்க தலைவர் தம்புசாமி, மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் சேகர் மற்றும் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் விவசாயி சரவணன் நன்றி கூறினார்


Next Story